ஆப்பிரிக்காவில் உள்ள சந்தையில் 58 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் உள்ள Darey-Daye என்ற கிராமத்திற்கு அருகில் இருக்கும் Banibangou என்ற சந்தையில் கடந்த திங்கட்கிழமை அன்று இருசக்கர வாகனங்களில் திடீரென்று கையில் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பல் ஒன்று புகுந்துள்ளது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கண்ணில்படுபவர்களை எல்லாம் சுட்டு தள்ளினர்.
மேலும் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் சந்தையில் இருந்த உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் சேதப்படுத்தி விட்டு சந்தையிலிருந்து தப்பி சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் சந்தையில் இருந்த 58 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதல் ஆப்பிரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.