ஆந்திராவில் 3 தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு வரும் 16ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது இதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களையும் வளர்ச்சி பெற செய்யும் வகையில் மூன்று தலைநகரங்களை ஏற்படுத்த ஆந்திரா அரசு திட்டமிட்டது. இதற்காக மக்களிடம் கருத்துகள் கேட்டு பெறப்பட்டன. அதன்படி கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினம் ஆட்சி தலைநகராகவும், அமராவதி சட்டசபை தலைநகராகவும் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான திட்டத்திற்கு 16 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். நேரடியாக பங்கேற்று சிறப்பிக்க இயலாத நிலையில், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாகவாது பங்கேற்க வேண்டும் என அதில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.