Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகநூல் மூலமாக மோசடி…. பெண் போல் பழகிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் போல் முகநூலில் பழகி இன்ஜினியரிடம் பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தை பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் இவருக்கு ஒரு பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அதன்பின் நண்பர்களாக பழகிய காரணத்தினால் தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் இனிமையான குரலில் பேசி முகநூல் மெசென்ஜரில் குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார். இதில் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி அந்தப் பெண் அவரிடம் பணம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து அருண்குமார் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். அதனால் அந்தப் பெண் தன்னுடைய வங்கி கணக்கு எண்ணை அனுப்பி பணத்தை செலுத்தும் படி தெரிவித்துள்ளார். அதன் படி அருண்குமார் மூன்று தவணைகளாக மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் அருண்குமாருக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பெண்ணின் முகநூல் கணக்கு குறித்து விசாரித்த நிலையில் தன்னிடம் பெண் போல் பழகியது ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் முகநூலில் பெண் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி பெண் குரலில் பேசி மோசடி செய்ததை அறிந்த அருண்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அருண்குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்தராஜ் என்பதும், இவர் தான் பெண் போல் பழகி மோசடி செய்ததை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மோசடி செய்த குற்றத்திற்காக ஆனந்தராஜ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |