Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. பொதுமக்கள் எதிர்ப்பு…. காவல்துறையினரின் பேச்சுவார்த்தை….!!

அம்பையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், முக்கூடல் வழியாக வரும் வாகனங்கள் அம்பை வடக்கு ரத வீதி வழியாக பேருந்து நிலையம் சென்று திரும்பும்படியாக  ஒரு வழி பாதை உள்ளது. அந்த பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துறை கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்துள்ளது.

Categories

Tech |