முள்வேலியை தாண்டி குழந்தைகள் தூக்கி எறியப்பட்டதற்கு இராணுவ அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றப்பட்டது. இதனால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் பெரும் கூட்டம் திரண்டது. ஆனால் இதில் சிலர் தப்பிச் செல்ல இயலாதவர்கள் தங்களது குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் விமான நிலையத்தை சுற்றியுள்ள முள் வேலியை தாண்டி குழந்தைகளை தூக்கி வீசினர்.இவ்வாறு தூக்கி வீசப்பட்ட குழந்தைகளை அந்த பக்கமுள்ள ராணுவ வீரர்கள் பிடித்தனர் என்று செய்திகள் வெளியாகின.
அப்படி இதுவரை மூன்று குழந்தைகள் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதில் ஒரு குழந்தையை அமெரிக்கா வீரர் ஒருவர் வாங்கும் காட்சியானது வலைதளங்களில் பரவி வைரலானது. இந்த நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரியான Jim Stenger இது குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியதில் “அது ஒரு பெண் குழந்தை. அதற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அமெரிக்கா வீரரிடம் கொடுக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மீண்டும் அந்த குழந்தை அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த குழந்தையும் அதன் பெற்றோர்களும் எங்கு உள்ளார்கள் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார். இதனை பென்டகன் செய்தித் தொடர்பாளரான John Kirby வெளியிட்டுள்ளார்.