ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியானது நேற்றுடன் நிறைவடைந்ததாக பிரித்தானியா ஜெனரல் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை கண்டு அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் ஆப்கானில் இருந்து பிரித்தானியா, கனடா அமெரிக்கா, போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் சற்று பின்வாங்கியுள்ளனர். இதற்கிடையில் தாக்குதலுக்குப் பின்னர் பிரித்தானியா அரசு அதிரடியாக மீட்பு நடவடிக்கையை நேற்றுடன் முடித்துக் கொண்டது. மேலும் மீட்பு பணிகள் அனைத்தும் எங்களின் திட்டத்தின் படி நடந்து முடிந்தது என்று பிரித்தானியாவின் ஆயுதப்படை தலைவர் ஜெனரல் சர் நிக் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.