பெண்கள் மீண்டும் பள்ளி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிலும் பெண்களின் நிலைமை என்னவாகும் என்ற அச்சவுணர்வு அனைவரிடமும் இருந்தது. மேலும் மக்கள் எதிர்பார்த்தது போன்றே தலீபான்கள் கடுமையான இஸ்லாம் மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் பெண்கள் பள்ளி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பெண்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.