Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு, ரேசன் கார்டு இல்ல… ரேஷன் பொருள் கூட வாங்க முடியல… 2 மாசமா பட்டினியில் தவித்த 6 உயிர்கள்…!!!

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இல்லாததால் அரசு வழங்கும் உதவிப் பொருட்களை கூட வாங்க முடியாமல் இரண்டு மாதங்களாக ஒரு குடும்பம் பசியில் வாடி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள காரணத்தினால் பல குடும்பங்கள் வருமானம் இல்லாமல் வாடி வருகின்றனர். அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற்று மட்டுமே வாழும் குடும்பங்களும் உள்ளது. ஆனால் அதை கூட பெற முடியாத அளவிற்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 5 குழந்தைகளுடன் இரண்டு மாதங்களாக பட்டினியில் வாடி வந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவர் இறந்து விட்ட காரணத்தினால் மனைவி மற்றும் 5 பிள்ளைகள் வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வந்துள்ளனர்.

மூத்தமகன் கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அந்த வேலையும் இல்லாமல் போக குடும்பமே பசியில் வாடி வந்துள்ளது. அரசு நிவாரண உதவியை பெறுவதற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இல்லை என்பதால் ரேஷன் கடைகளில் கூட உணவு பொருட்களை வாங்க முடியாமல் பல நாட்கள் உணவு உண்ணாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நடக்கக்கூட முடியாத அளவுக்கு இருந்தனர்.

இதை பற்றி அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. அவர்களுக்கு தேவையான சாப்பாடு, பழங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதையடுத்து அரசு சார்பில் ஆதார் கார்டு வழங்கவும், வங்கி கணக்கு தொடங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு அந்தியோதயா கார்டு வழங்கப்பட்டதாக அந்த மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |