தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஆதார் அட்டையை இணைத்தால் மட்டுமே மின் மானியம் நுகர்வோர்களுக்கு கிடைக்கும். எனவே மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம். அதன் பிறகு நேரடியாக மின்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும்போதே ஆதார் அட்டையை மின்கட்டண அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 100 யூனிட் இலவசம் மின்சாரம் மானியத்தை பெறுபவர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.
அதேநேரம் ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கும் மானியம் நிறுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரையின்படி மானியமானது யார் யாருக்கு சென்றடைகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் ஆதார் அட்டையுடன் மின்கட்டண அட்டையை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கட்டணம் செலுத்தும் இணையதளத்தில் ஆதார் அட்டையை இணைத்துக் கொள்வதற்கான வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஆதார் அட்டையை இணைப்பதற்கு https://adhar.tnebtled.org.adhurpload என்ற இணையதள முகவரியானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முகவரிக்குள் சென்று மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ளலாம். அதோடு tanged.gov.in என்ற இணையதள முகவரியிலும் சென்று இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஆதார் அட்டை எண் மற்றும் மின் கட்டண அட்டை எண் போன்றவற்றை பயன்படுத்தி மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.