இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் மொத்தம் 12 இலக்க எண் இருக்கிறது. இந்த ஆதார் கார்டு வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு விஷயங்களில் ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிகளில் கடன் கூட பெற்றுக் கொள்ளலாம். அதோடு உங்கள் ஆதார் அட்டையை வைத்து வங்கியில் இருக்கும் பணத்தை கூட திருடுவதற்கு வாய்ப்பு இருப்பதால் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
இது தொடர்பான எச்சரிக்கை தகவல்களை UIDAI அடிக்கடி வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது இணையதளத்தில் உள்ள கடன் செயலிகளில் ஆதார் அட்டை நம்பரை கொடுக்கக் கூடாது. ஒருவருடைய ஆதார் கார்டை மற்றொருவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. உங்களுடைய செல்போனில் ஆதார் கார்டு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக maadhar செயலியை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளலாம்.
அதன் பிறகு ஆதார் எண்கள் மறைக்கப்பட்ட மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும். இதனையடுத்து ஆதார் கார்டில் இருக்கும் க்யூ ஆர் கோடுகளை தேவையில்லாமல் ஸ்கேன் செய்ய கூடாது. உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் மொபைல் நம்பர் எப்போதும் ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒருவேளை செல்போனை மாற்றினால் அந்த நம்பரை ஆதார் கார்டில் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். மேலும் ஆதார் கார்டு ஓடிபி நம்பரை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.