தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் தமிழ் மட்டமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, அதன் பின் மாதவனுடன் இணைந்து அலைபாயுதே, விஜயுடன் சேர்ந்து கண்ணுக்குள் நிலவு, பிரசாந்துடன் இணைந்து பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி காதலித்து கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிப்பை விட்டு விலகினார். இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி பிரான்சில் எடுத்த ரொமாண்டிக் புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அமர்க்களம் படத்தில் பார்த்த ஷாலினி போன்று தான் தற்போதும் இருக்கிறார் என்று கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள். சமீபத்தில் ஷாலினி சமூக வலைதளத்தில் இணைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் ஷாலினியின் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.