Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

 ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி காணவில்லை என உமராபாத் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞனை பிடித்தனர்.

பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் ஆம்பூர் அடுத்துள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்த அஜித் என்பதும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.. இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், அஜித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த உமராபாத் போலீசார், வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |