சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மடவிளாகம் கிராமத்தில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார் ஓட்டுநரான இவர் மாலை நேரத்தில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது சாலையில் வந்த மினி லாரி மீது சதீஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனை அடுத்து இவ்விபத்தில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.