காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்.. 32 வயதுடைய இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் மற்றவர்களுடன் சண்டை போட்டு வந்ததோடு மட்டுமில்லாமல், அடிக்கடி கோபப்பட்டு வீட்டில் தகராறு செய்தும் வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பிரேம்குமார் தன்னுடைய காரை காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்காமல் அங்கிருந்து நிற்காமல் வேகமாக சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து போலீசார் வேகமாக விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின் அவர் போலீசாரிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் பிரேம்குமாரின் காரை போலீசார் சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் இருந்தன.. அவற்றை போலீசார் பறிமுதல்செய்தனர். இதனால் இவர் மீது மது விற்பனை தொடர்பாகப் புகாரும் எழுந்தது.
இந்தநிலையில் இன்று அவர் பைக்கில் வந்து காந்திபுரம் மேம்பாலத்தில் மேலே வண்டியை நிறுத்திவிட்டு, மேம்பாலம் மேல் ஏறி நின்று கொண்டு அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.. இந்த சம்பவம் குறித்து காந்திபுரம் காட்டூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் மனநல சிகிச்சையும் எடுத்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.