Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சும்மா உக்காந்திருந்தேன்… பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆடுகளை மேய்க்க சென்ற இளைஞன் மீது பாறை விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருக்களையனூர் பகுதியில் பழனியப்பன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மேட்டுக்காடு என்ற பகுதியில் ஆடுகளை மேய்ப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளான். அப்போது அங்கு உள்ள பாறையின் அடிப்பகுதியில் உட்கார்ந்திருக்கும் போது எதிர்பாரா விதமாக திடீரென பாறை உருண்டு மணிகண்டன் மீது விழுந்துள்ளது.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மணிகண்டனை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |