Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இரட்டை ஆண் குழந்தைகளை தவிக்க விட்டு… தூக்கில் தொங்கிய பட்டதாரி வாலிபர்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக பொறியல் பட்டதாரி வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மகிளிபட்டியிலுள்ள இரட்டை வாய்க்கல் கரை பகுதியிலுள்ள ஒரு வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்த வாலிபர் கரூர் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள கோவக்குளம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிகண்டன் (வயது 27) என்பது தெரியவந்தது.

மேலும் அவருக்கு கல்யாணம் முடிந்து இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன், இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகராறில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |