Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

மோடி சொன்ன ஒரு வார்த்தை.. கிராமத்திலும் களைகட்டும் தேசபக்தி… கொடியேற்றி மகிழ்ந்த சுகந்தலை…!!

வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த சுதந்திர தின விழாவில் அனைவரும் தேச ஒற்றுமையை முன்னிறுத்தி,  தேசப்பற்றை மேம்படுத்தி, நாட்டின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு முன்னெடுப்புகள் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

 

வீடுகளில் தேசிய கொடி:

அந்த வகையில் மத்திய – மாநில அரசுகளும் இதனை தொடர்ச்சியாக பொது மக்களிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களும் வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சமூக ஊடகமான ட்விட்டரில் தேசியக் கொடியை டிபியாக வைத்தார்.

முன்னாள் கேப்டன் தோனி:

பிரதமர் மோடியை போல மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய சமூக ஊடகங்களில் டிபியை தேசியக் கொடியாக மாற்றினார்கள்.இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் தனது இன்ஸ்டாகிராம் பக்க முகப்பில் தேசியக் கொடி படத்தை வைத்தார்.

நடிகர் ரஜினி:

தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட திரை பிரபலங்களும் சமூக ஊடகங்களில் பிரதமர் மோடி சொன்னதற்கு ஏற்ப டிபியில் தேசிய கொடியை வைத்தனர். அதேபோல் இன்றைய தினம் நாடு முழுவதும் பல பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி,  பிரதமர் மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி:

அந்த வகையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும்,  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தனது வீட்டில் கொடியேற்றினார். நடிகர் விஜய் அவரது இல்லத்திலும்,  நடிகர் ரஜினி அவரது இல்லத்திலும் கொடியை ஏற்றினர். இதே போல் தேசிய கோடியை ஏற்றி பட்டி தொட்டியெங்கும் பிரதமர் மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றி வருகின்றனர்.

 

கிராமத்திலும் களைகட்டும் தேசப்பற்று:

இந்திய நாட்டின் மகத்தான முன்னெடுப்பில் பொதுமக்களும் சாரைசாரையாக தங்களை இணைத்துக்கொள்ளும் வகையில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.  அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்திலும் பாரதிய ஜனதா கட்சி கிளை செயலாளர் முத்துவேல், சுகந்தலை ஊராட்சி OHT  ஆப்ரேட்டர் மோகன் ஆகியோர் நாட்டுப்பற்றை  மேம்படுத்தும் வகையில் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட்டனர். இவர்களின் தேசபற்றுக்கு அக்கம்பக்கத்தினர் பலரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |