அமெரிக்காவில் சிறுவனை கடத்தி சென்று அவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 26 வயதுடைய ஜெசிகா பிராட் என்ற இளம்பெண் ஒருவர் 16 வயது குறைவான சிறுவனிடம் ஆசையாக பேசி தன்னுடைய தந்தை மற்றும் மாற்றந்தாய் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.. பின்னர் அங்கு சிறுவனிடம் அந்தப்பெண் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதே போல சில தடவை ஜெசிகா தவறாக நடந்து கொண்டார் என்று நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த சிறுவனும் நடந்ததை கூறியுள்ளான்..
அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த பெண் கோர்ட்டில் ஆஜரானார்.. அவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.. இந்தநிலையில் வரும் ஆகஸ்ட் 24ஆம் திகதி ஜெசிகா மீண்டும் கோர்ட்டில் ஆஜராவார் என தெரியவந்துள்ளது.