Categories
தேசிய செய்திகள்

இப்படியும் ஒரு கிராமமா?… ஆச்சரியப்படவைக்கும் செயல்… காரணம் என்ன தெரியுமா?…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாலை விலைக்குக் கொடுக்காமல் இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் ஏலேகாவ் கவாலி என்ற கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 90 சதவீத வீடுகளில் கால்நடைகள் இருக்கின்றன. ஆனாலும் இந்த கிராம மக்கள் பாலை  விற்பனைக்கு கொடுக்காமல் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த செயல் குறித்து அந்த கிராமத்தை சோ்ந்த ராஜா பாவு மன்டாடே கூறுகையில், ‘‘கிராமத்தின் பெயரான ஏலேகாவ் கவாலி என்றாலே பால்காரர்களின் ஊர் என்பது பொருள். நாங்கள் கிருஷ்ணர் கடவுளின் வழியில் வந்ததாக  நினைக்கிறோம்.

எனவே நாங்கள் பாலை விற்பனை செய்வது கிடையாது. எப்பொழுதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இங்குள்ள கிருஷ்ணர் கோவிலில் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படும். ஆனால் தற்போது  கொரோனா காரணமாக இந்த தடவை அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்று அவர் கூறினார். இந்த கிராமத்தில்
தலைமுறை, தலைமுறையாக பாலை விற்பனை செய்யாத பழக்கம்  பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த செயலை இந்துகள் மட்டும் இல்லாமல் மற்ற மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த ஊர் தலைவர் சேக் கவுசர் என்பவர் கூறுகையில், “இந்து, முஸ்லிம் அல்லது எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எங்கள் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூட பாலை விற்பனை செய்வது கிடையாது. மேலும் இந்த கிராமத்தில் உள்ள 550 வீடுகளில் 90 சதவீத வீட்டில் பசு, எருமை, ஆடுகள் போன்ற கால்நடைகள் உள்ளன” என்று அவர் கூறினார்.

Categories

Tech |