கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை வனத்துறையினர் தைரியமாக பிடிக்கும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அந்த பலமொழிக்கேற்ப நாமும் பாம்பு என்றால் நடுங்கத்தான் செய்வோம். ஆனால் ஒருசிலர் சர்வசாதாரணமாக பாம்பை பிடித்து கையில் வைத்து விளையாடுவர். அதேபோல வனத்துறையினருக்கும் பாம்பை கண்டு பயம் இருக்காது. காரணம் வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனே பொதுமக்கள் அவர்களை தான் முதலில் கூப்பிடுவார்கள். அவர்களும் சாமர்த்தியமாக பாம்பை பிடித்து விடுவார்கள்.
அந்த வகையில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் குடகுமலை அருகே வஜ்ராப்பேட்டை என்ற இடத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஓன்று ஊர்ந்து செல்வதை கண்டு பொதுமக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த அவர்கள் குழாய் ஒன்றின் உதவியுடன் லாவகமாக ராஜ நாகத்தை பிடித்தனர். பின்னர் அதை வனப்பகுதிக்குள் விட்டனர்.