பெரம்பலூரில் மைதா மாவு ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு, லாரி எரிந்து சேதமடைந்தது.
பெரம்பலூர் மாவட்டம் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை நாரணமங்கலம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து மைதா மாவு ஏற்றி கொண்டு மதுரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி ஓன்று தீடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதைப் பார்த்த டிரைவர் பதற்றத்துடன் லாரியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த திடீர் தீ விபத்தில் லாரியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மைதா மாவு கருகி வீணாய் போனது. இச்சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.