Categories
உலக செய்திகள்

தடம் புரண்ட ரயில்…. 3 பேர் பலியான சோகம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று அம்ட்ராக் எம்பயர் பில்டர் என்ற பயணிகள் ரயில் சிக்கோகோவிலிருந்து சியாட்டிலுக்கு சென்று கொண்டிருந்த போது ஜோப்ளின் பகுதிக்கு அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் மொத்தம் 141 பயணிகளும் 16 பணியாளர்களும் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://twitter.com/i/status/1441946955781869569

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |