Categories
உலக செய்திகள்

நான் கற்பமானதே எனக்கு தெரியாது…. வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தான் கர்ப்பமானதே தெரியாத பெண்ணுக்கு பாத்ரூமில் வைத்து ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் பகுதியில் உள்ள மெலிசா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மெலிசா கடந்த மார்ச் 8ஆம் தேதி திடீரென வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் மெலிசா கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது வயிற்றின் உள்ளே இருந்து ஏதோ ஒன்று வெளியேறுவது போல் உணர்ந்துள்ளார்.

பின்னர் இரத்தமாக இருந்த அதை தொட்டுத் பார்த்தபோது தான் அது ஒரு அழகான ஆண் குழந்தை என்று தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கும் அவர் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில் மருத்துவர்கள் குழந்தை மற்றும் மெலிசா நலமாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மெலிசா கூறும்போது “நான் கர்ப்பமாக இருந்தது எனக்கே தெரியாது. அன்று காலை திடீரென்று எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

நான் கழிவறைக்கு சென்று வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என அவர் கூறியுள்ளார். மேலும் மெலிசாவுக்கு சீராக மாத விடாய் வராததால் இதைப் பற்றி அவர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கு ரியாம் என பெயர் சூட்டியுள்ளார். இந்த சம்பவம் மெலிசாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |