Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர்னு வந்த அறிக்கை…! 14நிமிடம் பார்த்தால் கைது… இதான் திராவிட மாடலா ? காளியம்மாள் விமர்சனம் …!!

கன்னியாகுமரியில் மலையை குடைந்து மணல் எடுப்பதை கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகி காளியம்மாள், கேரளாவில் கட்டக்கூடிய அதானினுடைய விழிஞ்சம்  துறைமுகத்திற்கு இங்கே இருந்து கல் போகிறது. உங்கள் ஆட்சி, உங்கள் அதிகாரமும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்டது. நீங்கள் பேருந்துக்கு என்றைக்கு லிப்ஸ்டிக் அடித்தீர்களோ, அன்றையோடு முடிந்து விட்டது. நீங்கள் என்ன மாதிரி ஆட்சி அதிகாரத்தில் நடத்துகிறீர்கள் என்று ?

பொதுவாக பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது ஒவ்வொரு பக்கமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள், திடீர்னு ஒரு அறிக்கை வருகிறது. பேருந்தில் வரும் போது, 14 நிமிடம் தொடர்ந்து பார்த்தால் அவர்களை கைது செய்யலாம் என்று… கண்டக்டர் சில்லறை கொடுக்கும் போது என்ன செய்வார் ? பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகிறவன் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு மரண தண்டனை என்று சொன்னது நாம் தமிழர் கட்சி.

சொல்லத் துணிவற்றவர்கள் இந்த திராவிடத்தை சேர்ந்த திராவிட மாடல், அதை சொல்ல முடியவில்லை.இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் 181க்கு அழைப்பு விடுங்கள், நான் பேசினேன் ஒரு அம்மாவிடம்.. நீங்கள் பாதிக்கப்படுவதற்கு முன்பு எனக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டுமா? அல்லது பாதிக்கப்பட்ட பிறகு வழக்குரைக்கு ஏற்பாடு செய்வீர்களா? நீங்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு நாங்கள் வக்கீல் வைத்துக் கொடுப்போம் என்று சொன்னதாக சொல்கிறார். இது தான் திராவிட மாடல் என தெரிவித்தார்.

Categories

Tech |