பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், நான் கொலை பண்ணுனேனா ? இல்ல திருட்டு வேலை செஞ்சனா ? எதுவுமே நான் பண்ணலையே. யாராயிருந்தாலும் சரி, என்னை தாக்கி பேசினால் நான் திருப்பி தாக்குவேன். ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தாங்க.
காலையில் எனக்கு போன் லைன்ல வந்தாரு. வந்த உடனே எனக்கு சொன்ன ஒரே ஒரு விஷயம், நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க அப்படின்னு சொல்லிட்டு சொன்னாங்க. அவர் சொன்ன காரணத்துக்கு என்னை எந்த பதிலும் கொடுக்க விடவில்லை. டக்குனு இல்ல, இல்ல… உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு போன வச்சுட்டாரு.
பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் போது, காயத்ரி ரகுராமாக… ஒரு பெண்ணாக… ஒரு பாஜக நிர்வாகியாக… என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.