தமிழ் சினிமாவில் வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கனகா. இவர் அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, கோயில் காளை, சாமுண்டி, விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். கடந்த 20 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் கனகா தன்னுடைய தந்தையுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் திடீரென நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்து குறித்து விசாரித்ததில் வீட்டில் குத்து விளக்கு ஏற்றிய போது அந்த தீ வீடு முழுவதும் பரவியது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் கனகா வீட்டில் இருந்த துணிமணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை கனகா நடிக்கும் ஆர்வம் உள்ளதால் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நடிக்க கற்றுக்கொண்டு விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுப்பேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.