Categories
உலக செய்திகள்

காட்டுப்பகுதியில் நடந்துசென்ற சிறுமி… வேகமாக வீசிய காற்று… பின் நடந்த சோகம்..!!

நடந்து சென்ற சிறுமியின் தலையில் மரம் விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனை சேர்ந்த மைசி எனும் 8 வயது சிறுமி சிட்டிங்போன் பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த இடத்தில் தனது தோழியுடன் நடந்து சென்றுள்ளார். அச்சமயம் மிகவும் கடுமையாக காற்று வீசியுள்ளது. இதனால் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடந்து சென்று கொண்டு இருந்த மைசியின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் இருந்த மற்றொரு சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் லண்டனில் இருக்கும் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 60 மைல் வேகத்தில் காற்று வீசியதால் மரம் வேரோடு சாய்ந்து சிறுமியின் உயிரை எடுத்துள்ளது. எலன் புயல் தொடர்பாக பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |