Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! போஸ் கொடுக்கும்போது இப்படியா நடக்கணும்…. 3 பிரிவுகளின் கீழ் கோப்பையை வென்ற பாடகிக்கு இப்படி ஆயிருச்சே….!!

19 வயது உடைய அமெரிக்க பாடகி கிராமி விருதை கீழே தவற விட்டு உடைத்தார்.

அமெரிக்க நாட்டில் லாஸ்வேகாஸ் நகர் அமைந்துள்ளது.  இந்த நகரில் 64 வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது.  இந்த விழாவில் 19 வயதுடைய அமெரிக்க பாடகி ஒலிவியா ரோட்ரிகோ மூன்று பிரிவுகளின் கீழ் கிராமி விருதுகளை வென்றார்.

இதனையடுத்து அவர் இந்த மூன்று கிராமி விருதுகளுடன் ரோட்ரிகோ புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது தனது கையிலிருந்த ஒரு கோப்பை கீழே தவற விட்டுள்ளார். இதனால் அந்த கோப்பை இரண்டாக உடைந்தது.  இதனைத் தொடர்ந்து உதவியாளர் ஒருவர் உடைந்த கோப்பையை ஒட்டி கொடுத்தவுடன் தான் ஒலிவியா பெருமூச்சு விட்டு  நிம்மதி அடைந்தார். பின்னர் சிரித்த முகத்துடன் பாடகி ஒலிவியா புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

Categories

Tech |