3000த்திற்கும் மேற்பட்ட மக்களுடன் ஒரு கப்பல் பெல்ஜியத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் பெல்ஜியத்தின் ஜீப்ரக் துறைமுகத்தில் நேற்று முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் பிளாண்டர்ஸ் மாகாண ஆளுநர் கார்ல் டெகலுவே (West Flanders provi0nce governor Carl Decaluwe) இந்த தடையை விதித்துள்ளார். பெல்ஜியத்தில், கொரோனா வைரஸால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இத்தாலியைச் சேர்ந்த சுமார் 2,500 பயணிகளும் 640 பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான லைனர் என்ற இந்த கப்பல், ஹாம்பர்க், சவுத்தாம்ப்டன், லு ஹவ்ரே, ஜீப்ரக் மற்றும் ரோட்டர்டாம் ஆகிய இடங்களுக்கு 7 நாள் பயணம் மேற்கொள்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த பயணிகளே பெரும்பாலும் கப்பலில் உள்ளனர்.
இதனிடையே பெல்ஜியத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் சோஃபி வில்மஸின் (Sophie Wilmès) ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் மக்கள் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் சுகாதாரத் துறை கொரோனா வைரஸைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பெல்ஜியத்தில் கொரோனா வைரஸால் 3 பேர் இறந்துள்ளனர். மேலும் 314 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.