Categories
தேசிய செய்திகள்

எனது சொத்தில் ஒரு பங்கு “எனது நாய்க்கு சேரும்”… உயில் எழுதி வைத்த விவசாயி… கொந்தளிக்கும் மகன்..!!

விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்த வளர்ப்பு நாய்க்கு சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயண பெருமாள் இவர் விவசாயி ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்ற செல்ல நாய்க்கு மட்டுமே சேரும் என எழுதி வைத்துள்ளார். ஹோம் நாராயணனின் உயிலில் எனது மனைவி சம்பா பாய் என்னை அக்கறையுடன் கவனித்து வந்ததாலும், என் செல்ல நாயே நான் ஜாக்கிரதையாக கவனித்து வந்ததால் இப்போது நான் நலமுடன் இருக்கிறேன்.

எனது மரணத்திற்குப் பிறகு செல்ல நாய் அனாதை ஆகிவிடுமோ என்ற அச்சம் இருக்கின்றது. தான் இல்லாத காலத்திலும் எனது தாய் அனாதை ஆகி விடக்கூடாது என்பதற்காக நன்றாக கவனிக்க வேண்டும் என்பதற்காக தனது சொத்தை நாய்க்கு பிரித்துக் கொடுத்து இருக்கிறேன். இறுதி மூச்சு வரை இவர்கள் இருவரும் மட்டுமே என்னை கவனிப்பார்கள் என்று நான் நம்புவதால் என் மரணத்திற்குப் பின் இவர்கள் தான் எனது இறுதி சடங்கை செய்ய வேண்டும் என அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.

மேலும் என் மரணத்திற்கு பிறகு எனது நாய் ஜாக்கியை கவனித்துக் கொள்பவர்கள் எனது சொத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இந்த உயிரில் 21 ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துகள் உள்ளன. மகனுடன் ஏற்பட்ட தகராறில் ஓம் நாராயணன் உயில் எழுதி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து மகன் மிகுந்த அதிருப்தியும், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து அவர்கள் ஓம் நாராயணனை சமாதானப்படுத்திய பிறகு உயிலை ரத்து செய்துள்ளார்.

Categories

Tech |