Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில்… கொரோனா 3ஆவது அலை… அக்டோபரில் உச்சமடையும்.!!

நாடு முழுவதும் கொரோனா 3ஆவது அலை அக்டோபரில் உச்சம் அடையும் என பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு பரவி உலகையே  ஆட்டிப் படைத்தது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்துமே ஊரடங்கு போட்டு கொரோனவை  கட்டுக்குள் கொண்டு வந்தன. இதையடுத்து முதல் அலை முடியத் தொடங்கியதும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது..

பின்னர் மீண்டும் 2ஆவது அலை புதிதாக தொடங்கியது.. இந்தியாவிலும் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது.. இதையடுத்து மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து சற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் தலை தூக்க தொடங்கி விட்டது கொரோனா.. இந்தியாவில் மீண்டும் கொரோனா மூன்றாவது அலை வருமென மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்..

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் அடையும் என பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

 

Categories

Tech |