Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருப்பு சிவப்பு நீலம் சேர்ந்தா போதும்”…. காவிய காலி பண்ணிடலாம்….. அதுக்கு முதல்ல இது நடக்கணும்….!!!!

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக விடுதலைச் சிறுத்தைகளுடன் முழுமையாக கை கோர்த்தால் வட மாவட்ட வன்னியர்கள் என்ன நினைப்பார்களோ, தென் மாவட்ட தேவர் சமுதாயத்தினர் என்ன நினைப்பார்களோ, கொங்கு மண்டலத்தில் என்ன நினைப்பார்களோ என்று பயந்து தான் அந்த கட்சிக்கு இது நாள் வரை அரைகுறை அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையை மாற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று ஆ.ராசா கூறியுள்ளார்.

மேலும் அண்ணாமலை எந்த வண்ணத்தாலும் காவியை ஒழிக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்த பேச்சை திருமாவும் சரி, திமுகவும் சரி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் கருப்பு, சிவப்பு, நீலம் மூன்றும் ஒன்று சேர்ந்தால் காவியை காலி செய்து விடலாம் என்று ஆ. ராசா கூறியுள்ளார். எனவே வருகின்ற லோக்சபா தேர்தலில் இவர்களின் உத்தி எப்படி இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |