Categories
மாநில செய்திகள்

குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. குவியும் பாராட்டுக்கள்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

ரயில்வே நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றி தானும் சாதுரியமாக தப்பித்த ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் வருகின்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாங்கனி ரயில்வே நிலையத்தில் தனது தாயுடன் பிளாட்பார்மில் நடந்து சென்ற குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அந்த குழந்தையின் தாய்க்கு கண்பார்வை கிடையாது. அதனால் அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதனைக்கண்ட மயூர் ஷெல்க்கேக்வ் என்ற ரயில்வே ஊழியர் உடனடியாக அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இந்த முயற்சியில் அவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தையை தூக்கி பிளாட்பார்மில் போட்டு தானும் சாமர்த்தியமாக தப்பித்துள்ளார். அவர் குழந்தையை காப்பாற்றிய காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைக்கண்ட பலர் ரயில்வே ஊழியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் அந்த ரயில்வே ஊழியருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு சன்மானமாக ரூபாய் 50,000 வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |