ரஷ்யாவில் பனியால் உறைந்து போயிருக்கும் உலகின் ஆழமான ஏரியில் விமானத்தை இறக்கி பைலட்ஒருவர் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
உலகின் மிக ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி இப்போது பனியால் முழுமையாக உறைந்துள்ளது. இந்த ஏரி உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20% இருப்பது குறிப்பிடத்தக்கது.
உறைந்து போயிருக்கும் இந்த ஏரியில் ஒரு சிறிய செஸ்னா 172 (small Cessna 172 plane) வகை விமானத்தை இறக்க பைலட் வாடிம் மகோரோவ் என்ற நபர் (Vadim Makhorov) திட்டமிட்டார்.
ஆனால் எந்த நேரத்திலும் பனி உடைந்து போகக்கூடும் என்ற நிலை இருந்ததாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் அதை மீறி பாளம் பாளமாக பிளவு பட்டிருந்த ஏரியின் உறைந்த மேற்பரப்பில் விமானத்தை இறக்கி சிறிது நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.