ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குடா ராம் சிங் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் சலீம் பாய் ராநவாஸ் என்பவர் கலந்து கொண்டார். இவர் மகிழ்ச்சியாக மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். இதை சுற்றி நின்றவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக சலீம் பாயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
இந்நிலையில் மகிழ்ச்சியாக திருமண விழாவில் நடனமாடும் போது 40 வயதை நெருங்கும் நபர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பது என்பது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மணிஷ் என்ற 35 வயது நபர் மேடையில் கர்பா நடனமாடிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதை கேள்விப்பட்ட அவருடைய தந்தை நராப்ஜி என்பவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் மாதம் ஜம்முவில் பார்வதி வேடம் அணிந்து யோகேஷ் குப்தா என்பவர் மேடையில் நடனமாடி கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும் தற்போது உயிரிழந்த சலீம் பாய் மேடையில் மயங்கி விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
राजस्थान के पाली में साली की शादी में स्टेज पर डांस करते-करते जीजा की मौत हो गई। जिस घर में शादी की खुशियां मनाई जा रही थीं, वहां मातम पसर गया। मामला महात्मा गांधी कॉलोनी का शुक्रवार रात का है। मृतक 42 साल के अब्दुल सलीम पठान सरकारी स्कूल में PTI (फिजिकल ट्रेनिंग इंस्ट्रक्टर) थे। pic.twitter.com/cDPwzutVM5
— Prasoon Shukla🇮🇳प्रसून शुक्ला🇮🇳राष्ट्र प्रथम (@EditorPrasoon) November 13, 2022