நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நெதர்லாந்தை சேர்ந்த பிஜோர்ன் ஹர்ம்ஸ் அர்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கணினி மென்பொறியாளரான இவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார். குழந்தைகள் விளையாடும் கார் போல் ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் இந்த புதிய காரை இயக்கிக் காட்டி அசத்துகிறார்.
மேலும் அடுத்த கட்டமாக இந்த காரை குரல் பதிவின் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் அதற்கான மென் பொருட்களைக் கண்டறிந்து இயக்க முயற்சி செய்து வருவதாகவும், தற்போது இந்த காரை 141 கி. மீட்டர் வேகம் வரை இயக்கமுடியும் என்றும் பிஜோர்ன் கூறுகிறார்.
கடந்த 1985-ம் ஆண்டு வெளியான பேக் டூ த பியூச்சர் (Back To The Future)என்ற திரைப்படத்தில் வரும் காரை போன்றே தற்போதைய காரையும் அசத்தலாக வடிவமைத்துள்ளதாகத் தெரிவித்தார். இவரின் இந்த புதிய வகை கார் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.