உயிரிழந்த ஒருவரின் உடலை ஆட்டோவின் மேல்புறம் கயிறு கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் வேதனை அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை, ஆக்சிஜன், மருந்துப் பொருட்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல ஆம்புலன்சும் போதுமான அளவு கிடைக்கவில்லை.
https://youtu.be/w89zBG5OuvQ
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசி பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வேறு வழியின்றி குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு ஆட்டோவை பிடித்து அந்த ஆட்டோவின் மேல்புறம் பிணத்தை கட்டி அதில் எடுத்துச் சென்று இறுதிச்சடங்கை செய்துள்ளனர். இது வீடியோவாக இணையதளங்களில் வெளியாகி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.