பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி பிரம்மாண்டமான ஓவியம் ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிந்து வரும் சூழ்நிலையில் அக்காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பல்களை கொண்டு அற்புதமான ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியமானது பற்றி எரிந்து கொண்டிருக்கும் காட்டில் தீயணைப்பு வீரர் ஒருவர் இறந்த விலங்குகள் மத்தியில் நிற்பதைப் போன்று ஸ்ட்ரீட் ஆர்ட் முறையில் சாவோ பாலோவின் மிகப் பெரிய கட்டிடத்தில் வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியத்தை ஓவிய கலைஞர் மண்டனோ என்பவர் வரைந்துள்ளார். அதாவது மண்டனோ இந்த பிரம்மாண்ட ஓவியத்தினை பிரேசிலில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து வனப்பகுதிகளில் எரிந்த மரங்களில் உள்ள சாம்பலை சேகரித்து ஓவியத்தை தீட்டியுள்ளார்.