Categories
மாநில செய்திகள்

“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் ALERT….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும், நம்பர் 9-ம் தேதி இலங்கையை ஓட்டி இருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையை நோக்கி வடமேற்கு திசையில் நகரக்கூடும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மக்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மழை வெளுத்து வாங்கும் நிலையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த  தாழ்வு நிலையின் காரணமாக மிக கனமழை மற்றும் புயல் உருவாவதற்கு வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சம் மக்களிடத்தில் நிலவுகிறது.

இதனையடுத்து இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்த அளவில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்சமாக 30 முதல் 31 வரையிலும், குறைந்தபட்சமாக 23 முதல் 24 செல்சியஸ் டிகிரி வெப்பநிலையும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |