லேன்செட் பத்திரிக்கை ஆய்வில் புதிய மருந்து ஒன்று கொரோனாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு பலன் அளிப்பது தெரியவந்துள்ளது.
‘தி லேன்செட் சுவாச மருந்து’ பத்திரிகை வெளியிட்ட ஆய்வில் கொரோனாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு புதிய மருந்து ஒன்று பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் இணைந்து இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.
அதில் கொரோனாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முடக்குவாத நோய்க்கு பயன்படுத்தப்படுகின்ற “நமிலுமாப்” என்ற ஆன்டிபாடி மருந்து (நோய் எதிர்ப்பு பொருள்) நல்ல பலனளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மேலும் கொரோனாவால் ஏற்படும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு “நமிலுமாப்” மருந்து வீக்கத்தைக் குறைக்கிறது என்பதற்கான ஆதாரத்தை எங்களுடைய ஆய்வுகள் வழங்கியுள்ளதாக பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான பென் பிஷர் கூறியுள்ளார்.