ஐக்கிய அரபு அமீரகத்தில் வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை பொதுமக்களை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் எல்லைக்கு அருகே அல் ஐன் (Al ain) நகரில் வானத்தில் திடீரென மிகப்பெரிய துளை உருவானது. இந்த துளையால் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இந்த துளை பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனை கண்டதும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசத்தொடங்கினார்.
இதனை சிலர் மற்றொரு உலகத்திற்க்கான வாயில் என இந்த அதிசய துளையை வருணிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக வானிலை ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று அதிசயம் நிகழும் எனக் கூறியுள்ளனர்.