செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வந்து நன்கு கற்றவர், அவர் மனச்சான்றோடு பேச வேண்டும். இலவசங்களால் மக்களின் வாழ்வுநிலை பாதிக்கிறது என்று சொல்லும் இடத்திற்கு நான் வரவில்லை. இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்று அவரால் நிரூபிக்க முடியுமா ? பொருளாதாரம் படித்த, உலக அரசியலை கற்ற ஒருவர் இப்படி பேசக் கூடாது.
அதனால் இது மோசமான திட்டம்.. இதனால் நாடு, அரை அங்குலம் கூட அல்ல, ஒரு புள்ளி அளவுக்கு கூட வளராது. ஒரு கேள்வியை நாம் கேட்போம், இலவசங்களால் இழக்கின்ற பணம் இருக்குல்ல… அதை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? 130 லட்சம் கோடி அதுக்கு கடனாகிவிட்டது, உங்களுக்கு 6 1/2 லட்சம் கோடிக்கு மேல போய்ட்டீர்கள். எதற்கு நீங்கள் இனிப்பான வெற்று அறிவிப்புகளை நீங்கள் கொடுக்கிறீர்கள்.
எனக்கு திரும்ப திரும்ப சொல்ல தோணுவது, குன்றக்குடி அடிகளார் சொன்னதுதான்…. ஆறுதலால் காயங்கள் ஆறுவதில்லை, அழுவதனால் எதையும் அடைத்து விட முடியாது, தூறல்களால் பயிர்கள் விளையாது, என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என்கிறார். இது வந்து எப்படி எடுத்துக் கொண்டாலும் கொடுமையான கையூட்டு, லஞ்சம் தான் இது.
ஒரு நாடு எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? மிக அடிப்படை தேவை, அத்தியாவசிய தேவை, மாவு அரைக்கிற இயந்திரம், மசாலா அரைக்கிற இயந்திரம், மடிக்கணினி, மின்விசிறி, தொலைக்காட்சி இதெல்லாம் நான் சொந்த வருமானத்தில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய ஒன்று. அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஏழ்மையில், வறுமையில் வைத்ததை வந்து, எப்படி நீங்கள் சாதனை என்கிறீர்கள்?
இலவச அரிசி போடுகிறீர்கள். முதலில் இரண்டு ரூபாயில் ஆரம்பித்தது, அப்புறம் ஒரு ரூபாய்க்கு வந்தீர்கள். அதன்பிறகு இலவசம் என்று சொல்கிறீர்கள், இரண்டு ரூபாய்க்கு வக்கில்லாமல் போயிட்டோம், அடுத்து ஒரு ரூபாய்க்கு நாதி இல்லாமல் போயிட்டோம். திருப்பி இலவசம் என்று சொல்கிறீர்கள். இலவசமாக எத்தனை ஆண்டுகளுக்கு நீங்கள் அரிசியை கொடுக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.