பல் துலக்கும்போது 19 சென்டி மீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை நபர் ஒருவர் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காலையில் பல் துலக்கும்போது 19 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பிரஸ்சை எதிர்பாராத விதமாக விழுங்கி விட்டார். 39 வயதுடைய அவர் செப்டம்பர் 15ஆம் தேதி பேக்கின் பெர்டின் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்தபோது அவரது உணவுக்குழாயில் பிரஸ்சை கண்டறிய முடியவில்லை. அதன் பிறகு வயிற்றின் உள்ளே பிரஸ் நுழைந்திருக்க வேண்டும் என அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரைத்தார். அதனையடுத்து லபரோடோமி பரிசோதனை செய்ய மருத்துவமனையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டார்.
பிரஸ்சை விழுங்கிய அவர் அதிர்ஷ்டவசமாக எந்த வலியையும் உணரவில்லை. அவர் அடிவயிற்றில் மட்டும் சிறிய பிரச்சனையை இருப்பது போல் தெரிந்துள்ளது. அதன் பிறகு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது அடிவயிற்றிலிருந்து 35 நிமிடத்தில் பிரஸ்சை மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர். தற்போது அந்த நபர் பிபிஎம்ஹெச்சில் இருக்கும் அறுவை சிகிச்சை வார்டில் அவர் இருக்கிறார். அவரது உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.