Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வசித்த பிரித்தானிய இளம்பெண்…. துப்பாக்கியால் சுட்டு கொலை…. அதிரடி விசாரணையில் காவல்துறையினர்….!!

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பிரித்தானிய இளம்பெண்ணான மாயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 26 வயது ஆகின்றது. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து பாக்கிஸ்தானுக்கு வந்து வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் தலையில் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அதை வீட்டின் மேல்பகுதியில் மாயாவின் தோழி ஒருவர் வசித்து வருவதாகவும் அவர் தான் இந்த கொலை வழக்கில் போலீசாருக்கு உதவி வருவதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்பின் சம்பவம் நடந்த இடத்தை சுற்றி சோதனை மேற்கொண்டதில் இறந்து கிடந்த மாயாவின் உடல் அருகில் ஒரு மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இடையே இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக இரண்டு நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர்கள் மாயாவை திருமணம் செய்து கொள்ள போட்டி போட்டதாகவும் இறுதியில் மாயா இருவரையுமே நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் தான் அவர்கள் மாயாவை கொன்றிருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

Categories

Tech |