ஏழு ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த மனைவியை அவருடைய காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவரை பற்றி கேள்விபடும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
பீகார் மாநிலத்தில் சுல்தான் கஞ்ச் நகரில் உத்தம் பட்டேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுகாரியா மாவட்டத்தில் வசிக்கும் சப்னா என்ற பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் எப்போதும் போல அமைதியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் உறவினர் என்ற பெயரில் ஒருவர் வந்துள்ளார். இவரும் உத்தம் வீட்டின் அருகில் வசித்து வந்துள்ளார். அவரைக் கண்டதும் சப்னா காதலிக்க ஆரம்பித்து உள்ளார். ஆனால் அவர் தனது கணவர் குழந்தைகளை பற்றி சிந்திக்கவே இல்லை.
இதனை அறிந்ததும் உத்தம் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கணவன் மனைவிக்கு இடையே இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சப்னாவின் பெற்றோர் உறவினர்கள் அனைவரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் வேறு வழியின்றி உத்தம் தனது மனதை மாற்றிக் கொண்டு சப்னாவின் காதலை சேர்த்து வைக்க முடிவு எடுத்துள்ளார். அதன் விளைவாக அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார்.
இதில் சப்னாவின் உறவினர்கள் பெற்றோர்கள் மற்றும் கணவர் குழந்தைகள் முன்னிலையில் அவருக்கு ராஜீவுடன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. அதன்பின் உத்தம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு கண் கலங்கி நின்றுள்ளார். இதனை கண்டதும் அங்குள்ளவர்கள் வேதனையில் நின்றனர். மேலும் சப்னா தனது இரண்டு மகன்களை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அதனால் உத்தம் தனது இரண்டு பிள்ளைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனை கேட்கும்போதும் காணும்போதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.