Categories
உலக செய்திகள்

“டைம்லாப்ஸ்” முறையில் படம் பிடிக்கப்பட்ட சுழற்காற்று.!!

அமெரிக்காவில்  புயல் காற்று வேகமாக சுழன்றடித்ததை ஒருவர்  “டைம்லாப்ஸ்” முறையில் படம் பிடித்துள்ளார். 

இயற்கையில்  ஏற்படும் திடீர் மாற்றத்தால் ஏதாவது விசித்திரமான நிகழ்வு  இவ்வுலகில்  நடைபெறுகிறது. இதனால் வானில் வித்தியாசமாகவும்,  பார்ப்பதற்கு சற்று திகைப்பூட்டும் வகையில் ஏதாவது மாறுதல் நிகழ்கிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் நிலப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சுழற்காற்று ஒன்று உருவானது. மேகங்களை சுற்றி வளைத்த அந்த சுழற்காற்று மெல்ல மெல்ல சுழன்று வந்தது.இது பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால் அனைவரும் ஆச்சரியத்தில் பார்த்தனர்.

இந்த அற்புத காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் டைம்லாப்ஸ் முறையில் படம் பிடித்துள்ளார். அப்போதுதான் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுழன்றடித்த அந்தப் புயல் நகர்ந்து செல்வது தெரிந்தது. பின்னர் காற்று பலத்த வேகத்தில் வீசியதில்  சுழற்புயல்  இழுத்துச் செல்லப்பட்டு சில மணி நேரத்தில் வலுவிழந்தது.

Categories

Tech |