Categories
உலக செய்திகள்

இதயம் மாற்ற சென்ற போது ஏற்பட்ட துயரம்… ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் காயம்..!!

ஜப்பானில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு இதயத்தை எடுத்துச்சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.

ஜப்பான் நாட்டின் புகுஷிமாவில் ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் இதயத்தை எடுத்து வேறொருவருக்கு பொருத்திக்கொள்வதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் அந்த நபரின் இதயத்தை அகற்றப்பட்டு, டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒருவருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது.

Image result for A Fukushima Prefectural Police helicopter crash-landed Saturday in the city of Koriyama in the prefecture, injuring all seven people"

இதையடுத்து இதயத்தை உடனடியாக கொண்டு சென்று அவருக்கு பொருத்தவேண்டும் என்று கூறிய டாக்டர்கள் விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக காவல்துறையின் ஹெலிகாப்டரில் எடுத்துச்சென்றனர். அப்போது  எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கீழே வயலில் விழுந்து விபத்துக்குள்ளானதால் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |