Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவங்க மேலேயே கை வச்சுட்டாங்க… கோபத்தால் நடந்த விபரீதம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

தனது பணியை செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின்  மேம்பாலத்தில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே வாகனத்தில் பயணம் செய்பவர்கள் முககவசம் அணிந்து உள்ளாரா என சோதனை செய்தும் வருகின்றனர். இதில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் இருக்கிறதா மற்றும் இருமல், சளி உள்ளதா எனவும் பரிசோதனை நடத்தி அறிகுறிகள் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இதனையடுத்து வழக்கம்போல் அப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் 500-க்கும் அதிகமான பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற 38 வயதுடைய நபரை மரித்து நிற்கச் செய்து ஏன் முககவசம் அணிய வில்லை என்ற வினாவை சுகாதாரத் துறையினர் கேட்டுள்ளனர். அதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்க்கும் மற்றும் சுகாதாரத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் வாகனத்தில் வந்தவர் சுகாதாரதுறை ஆய்வாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காவல்துறையினர் வருவதற்கு முன்பே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர் மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் சுகாதாரத்துறை ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சுகாதாரதுறை  ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |