Categories
சினிமா தமிழ் சினிமா

பன்முகத் திறமைகளை கொண்ட பஞ்சு அருணாச்சலத்திற்கு பிரம்மாண்ட விழா?….. கமல், ரஜினி, இசைஞானி, பாரதிராஜா பங்கேற்பு….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகத் திறமைகளை கொண்டவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம். இவர் தான் இசைஞானி இளையராஜாவை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினியின் பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் பஞ்சு அருணாச்சலத்தின் 80-வது பிறந்தநாள் விழா மிகப் பிரமாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விழா வருகிற டிசம்பர் 2-ம் தேதி பஞ்சு 80 என்ற பெயரில் நடைபெற இருக்கிறதாம். இந்த விழா கடந்த வருடமே நடைபெற இருந்த நிலையில், கொரோனா காரணமாக தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது  பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு விழாவை முன்னின்று நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகாத நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |