Categories
மாநில செய்திகள்

வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….. நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவிப்பு….!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே எருக்கூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராமன்-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு அக்ஷிதா (5) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமி நேற்று மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. இந்த வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியை நீண்ட நேரம் காணாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுமி வாய்க்காலில் பிணமாக மிதந்தது தெரிய வந்தது.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியின் மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |